Published : 25 May 2021 03:13 AM
Last Updated : 25 May 2021 03:13 AM

தமிழகத்துக்கு 14 கோடி தடுப்பூசிகள் வழங்க மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல் :

விருதுநகர்: விருதுநகர் அருகே நந்திரெட்டியபட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களை சந்தித்து வேலைவாய்ப்பு வழங்கப்படுவது குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. கேட்டறிந்தார். அப்போது, தொழிலாளர்களுக்கு இலவச முகக் கவசங்கள், உடல் வெப்பநிலை அறியும் கருவிகள் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்பட வேண்டாம். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு 14 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x