Published : 25 May 2021 03:13 AM
Last Updated : 25 May 2021 03:13 AM

சிவகங்கை மாவட்டத்தில் : ரேஷன் கடைகள் முன் திரண்ட மக்கள் :

காரைக்குடி சுப்ரமணியபுரம் ரேஷன் கடை முன் நிவாரணத்தொகை, பொருட்கள் வாங்குவதற்காக காத்திருந்த பொதுமக்கள்.

காரைக்குடி: தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கின்போது அத்தியாவசியத் துறைகள் மட்டும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் ரேஷன் கடைகள் திறப்பு குறித்த தெளிவான அறிவிப்பு இல்லை. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளை திறக்க வேண்டாம் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகளும், திறக்கலாம் என்று வழங்கல் துறை அதிகாரிகளும் விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த குழப்பத்தால் காரைக்குடி பகுதியில் சில ரேஷன் கடைகள் திறந்தும், பெரும்பாலான கடைகள் மூடியும் இருந்தன. மேலும் பொதுமக்களும் நிவாரணத்தொகை, ரேஷன் பொருட்கள் வாங்க கடைகளுக்கு வந்தனர். ஆனால் சில மணி நேரத்திலேயே திறந்த ரேஷன் கடைகளை அடைக்க வழங்கல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். முறையான அறிவிப்பு இல்லாததால் பொது மக்கள் மட்டுமன்றி, ரேஷன் கடை விற்பனையாளர்களும் சிரமத்துக்கு உள்ளாகினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x