Published : 25 May 2021 03:14 AM
Last Updated : 25 May 2021 03:14 AM
வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/திருவண்ணாமலை
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட் டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் கடைகள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடின.
வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடந்த 2 நாட்களாக சுற்றித்திரிந்த பொது மக்கள் நேற்று முதல் வீடுகளில் முடங்கினர்.
இதனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கியச்சாலைகள் அனைத்து ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, பால், மருந்து, குடிநீர் போன்றவற்றைத் தவிர மற்ற அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட் டுள்ளன. நேரக்கட்டுப்பாடுகளுடன் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழக-ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடி, பேரணாம்பட்டு அடுத்த பத்தலபள்ளி சோதனைச் சாவடி, வேலூர் அடுத்த பிள்ளையார் குப்பம் உள்ளிட்ட அனைத்து எல்லைகளும் தடுப்பு வேலிகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில் காவல் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்களில் இ-பதிவு உள்ளதா? என்பதை சோதனை செய்த பிறகே மாவட்டத்துக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
அபராதம் விதிப்பு
அதேபோல், வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, பாகாயம், குடியாத்தம், பேரணாம் பட்டு, அணைக்கட்டு உட்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில இடங்களில் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்தவர் களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர். முக்கிய சாலை சந்திப்புகளில் 900 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மாவட்டம் முழுவதும் 57 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டது. அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் 44 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
அந்த மாவட்டத்தில் மருந் தகம், பால் விநியோகம், குடிநீர் ஆகியவை மட்டும் தடை யின்றி கிடைத்தன. நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் 650 காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 33 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அவசியம் இல்லாமல் வெளியே வந்தவர் களை காவல் துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர். மாவட்டம் முழுவதும் 500-க்கும்மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
தமிழக அரசு பிறப்பித்துள்ள ஒரு வார முழு ஊரடங்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்தது. மளிகை கடை, காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உட்பட அனைத்து வகை கடைகளும் மூடப்பட்டன.தேநீர் கடைகளும் அடைக்கப் பட்டன. அதே நேரத்தில் மருந்தகங்கள், பால் விற்பனை மையங்கள் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டதால் திறந்திருந்தன. இதனால், மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.
வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை தடுக்க, மாவட்ட எல்லைகளில் 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறை மூலமாக கண்காணிக்கப்பட்டது. இ-பதிவு இல்லாமலும் மற்றும் அனுமதி சீட்டு இல்லாமல் வந்த வாகனங் கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், மாவட்டத்தின் உள் பகுதி யிலும் சுமார் 75 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, இரு சக்கர வாகனங்களில் சுற்றி திரிந்தவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில், அத்தியாவசிய பணிக்கு சென்ற வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், தமிழக அரசு உத்தரவுப்படி தள்ளுவண்டிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யும் பணி தொடங்கியது. மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு, மக்களின் வசிப்பிடத்துக்கு சென்று காய்கறிகள் விநியோகிக்கப்பட்டது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள சென்றவர் களை காவல் துறையினர் அனுமதித்தனர்.
மேலும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக் கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பின்பற்றி, மக்கள் வெளியே வராமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத் துறை யினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT