Published : 24 May 2021 03:12 AM
Last Updated : 24 May 2021 03:12 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் - நடமாடும் வாகனங்களில் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை : அதிக விலைக்கு விற்றால் புகாரளிக்க ஏற்பாடு

தி.மலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை/தி.மலை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் தளர்வில்லாத ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், நடமாடும் காய்கறி கடைகள் முறையான அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஊரடங்கின்போது மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள், பால், குடிநீர் விநியோகம், உணவகம், பேக்கரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனுமதி அளிக்கப்பட்ட கடை களை தவிர பிற கடைகள் திறக்கஅனுமதியில்லை. காய்கறி, மளிகைகடைகள் திறக்க அனுமதி மறுக்கப் பட்ட நிலையில், தினசரி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை வீடுகள் தோறும் வாகனங்களில் விற்பனை செய்யப்படும். இதற்காக மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மூலமாக மொத்த காய்கறி விற்பனை சங்கங்கங்கள், உள்ளூர் காய்கறி வியாபாரிகள் மூலம் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

வேலூர் மாநகராட்சியில் 113 வாகனங்கள், பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் நகராட்சியில் 46 வாகனங்கள், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம், ஒடுக்கத்தூர் பேரூராட்சிகளில் 34 வாகனங்கள், இதர ஊரக பகுதிகளில் 244 வாகங்கள் என மொத்தம் 437 வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும், 90 தள்ளுவண்டிகள் மூலம் விற்பனையும் நடைபெறும்.

காய்கறி விலை நிர்ணயிக்கப்படும்

காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் அந்தந்த பகுதி வட்டாட்சியர் அல்லது மாநகராட்சி ஆணையர் மூலமாக அனுமதி சீட்டு பெற வேண்டும். வேலூர் மாங்காய் மண்டி பகுதியில் இருந்து மொத்த வியாபாரம் நடைபெறுவதற்கு வசதியாக தினசரி காலை 4 மணி முதல் 9 மணிக்குள் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப் படுகிறது. இதற்கு, அனுமதி சீட்டு அவசியம்.

இங்கு, பொதுமக்கள் நேரடியாகச் சென்று பொருட்கள் வாங்க அனுமதியில்லை. காய்கறிகளின் விலை வேளாண் வணிக துணை இயக்குநர் மூலம் நிர்ணயம் செய்யப்படும்.

காய்கறிகள் அதிக விலைக்கு விற்பது குறித்து புகார்கள் வரப்பெற்று உறுதி செய்யப்பட்டால் வியாபாரிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்.

காய்கறி, மளிகை, பால் பொருட்களை அதிக விலைக்கு விற்பது குறித்து புகார் இருந்தால் மாவட்ட அளவில் 94987-47597 அல்லது 94987-47599 அல்லது 94987-47605 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்ப ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘காய்கறி, பழங்கள், மளிகை பொருட்களை நான்கு சக்கர வாகனத்தில் விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர், பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுமதி சீட்டு பெற வேண்டும். ஊரடங்கு காலத்தில் பின்பக்க கதவு வழியாக வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதி அளிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் தொழி லாளர்கள் தனியாக வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. நிறுவனத்தின் சார்பில் பேருந்து அல்லது மினி வேன் மூலமாக அழைத்துச் செல்ல வேண்டும்.

நகராட்சி ஆணையாளர்கள் அரக்கோணம் (73973-89305), வாலாஜா (73973-92677), ராணிப்பேட்டை (73973-92683), மேல் விஷாரம் (73973-92673), வட்டார வளர்ச்சி அலுவலர்களை வாலாஜா (74026-06519), சோளிங்கர் (74026-06553), நெமிலி (74026-06562), காவேரிப் பாக்கம் (74026-06569), ஆற்காடு (74026-06524), திமிரி (74026-06529), பேரூராட்சி செயல் அலுவலர்களை அம்மூர் (78240-58554), கலவை (78240-58555), காவேரிப்பாக்கம் (78240-58556), நெமிலி (78240-58558), பனப்பாக்கம் (78240-58561), சோளிங்கர் (78240-58563),தக்கோலம் (78240-58566), விளாப் பாக்கம் (78240-58568) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்திலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய்ய உரிய அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

கரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள தளர்வில்லாத முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.

அப்போது ஆட்சியர் பேசும் போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் ஆகியவை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை, மக்களின் வசிப் பிடங்களுக்கு சென்று விற்பனை செய்ய வேண்டும்.

இதற்காக. வியாபாரிகள் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி அட்டை வழங்க வேண்டும். மேலும். அனுமதி அட்டையில் வாகன எண், நேரம், தெரு உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிட வேண்டும். அதன் விவரங்களை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

பொது மக்கள், தங்களது பகுதியை விட்டு வெளியே வராத வகையில், அவர்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் செயல்படும் மொத்த விற்பனை சந்தையில் சில்லறை விற்பனையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x