Published : 23 May 2021 05:52 AM
Last Updated : 23 May 2021 05:52 AM

வேலூர், திருப்பத்தூர், தி.மலை மாவட்டங்களில் - புதிதாக 1,847 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர்/திருப்பத்தூர்

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் புதிதாக 1,847 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 595 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்து 332-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை 700 என்றளவில் இருந்து தற்போது 600-ஆக குறையத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 495 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து 353 பேர் வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 4,269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 757 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 34,461-ஆக உயர்ந்துள் ளது. 28,383 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

2 பேர் உயிரிழப்பு

5,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 378-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x