Published : 19 May 2021 03:14 AM
Last Updated : 19 May 2021 03:14 AM
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் புள்ளி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச் செயற்குழுக் கூட்டம் நேற்று காணொலிக் காட்சி மூலம்கிருஷ்ணகிரியில் நடந்தது. கூட்டத்திற்கு வட்டாரத்தலைவர் ஹென்றி பவுல் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மரிய சாந்தி முன்னிலை வகித்தார். மகளிர் வலையமைப்பு செயலர் தவச்செல்வி வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட மகளிர் வலை யமைப்பு செயலாளர் அனுராதா கருத்துக்களை கூறினார்.
அதில், மாநில பொதுச்செயலா ளர் கடிதத்தின்படி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும்குழந்தை களின் பெற்றோர் கரோனா தொற்றால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இறந்துள்ளனர். பெற்றோரை இழந்த பள்ளிக்குழந்தைகளுக்கு வரும் ஆண்டுகளில் அரசின் ஆதரவு தேவைப் படும். இந்த ஆதரவை அரசிடம் கோரி பெற்றுத்தரவேண்டும். நிச்சயமாக இந்த குழந்தை களுக்கு உதவ, அவ்வாறு உள்ள குழந்தைகள் யார் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். எனவே இயக்க உறுப்பினர்கள் சார்ந்த புள்ளி விவரங்களை https://forms.gle/1XZ5o7TRo6GxUVBz8 இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கை காணொலி கூட்டத்தை, தமிழக அரசு புறக்கணிப்பு செய்ததற்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு வரவேற்கிறது. கடந்த 2018 மே 18-ல் வெளியான அரசாணை 101-யை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT