Published : 14 May 2021 03:13 AM
Last Updated : 14 May 2021 03:13 AM
தி.மலையில் பழுதடைந்துள்ள எரிவாயு தகன மேடை 3 நாட்களில் சீரமைக்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தி.மலை ஈசான்ய மைதானத் தில் நவீன எரிவாயு தகன மேடை உள்ளது. தினசரி 5-க்கும் மேற்பட்ட உடல்கள் தகனம் செய்யப்பட்டு வந்தன. இதற்கிடையில், எரிவாயு தகன மேடை பழுதடைந்தது. இதனால், கடந்த சில நாட்களாக எரிவாயு தகன மேடையை பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. விறகு கட்டைகளை கொண்டு உடல்கள் தகனம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் எரிவாயு தகன மேடையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, “தி.மலையில் உள்ள எரிவாயு தகன மேடையில் தினசரி 4 முதல் 5 உடல்கள் தகனம் செய்யப்பட்டு வந்தன. கரோனா தொற்று காரணமாக கூடுதலாக உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இதனால், தகன மேடையில் பழுது ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்வதற்காக, சென்னையில் இருந்து பணியா ளர்கள் இன்று (நேற்று) வர உள்ளனர். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் தகன மேடை சரி செய்யப்படும்.
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத மக்களிடம் இருந்து தினசரி அபராதம் வசூலிக்கப்படுகிறது. முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். தி.மலை பழைய அரசு மருத்துவமனை மற்றும் ஆயுஷ் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது” என்றார்.
அப்போது, கோட்டாட்சியர் வெற்றிவேல், நகராட்சி ஆணை யா ளர் கிருஷ்ண மூர்த்தி, சுகா தாரத் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அஜிதா உள்ளிட்டோர் உடனிருந்த னர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT