Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்காக 4 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்திற் கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சியர் அலு வலகம், அரசு மருத்துவமனை களில் பணியாற்றும் பலர், ஊத்தங்கரை, ஓசூர், தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் தினமும் அலுவலங்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வரும் வகை யில், காலையில் ஊத்தங்கரை, ஓசூர், தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து, கிருஷ்ணகிரிக்கு தலா ஒரு பேருந்து இயக்கப்படுகிறது.
அதில் அரசு ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து பயணிக் கலாம். அதேபோல், அவர்கள் பணிமுடிந்து திரும்பி செல்வதற்காக மாலையில் கிருஷ்ணகிரி யிலிருந்து ஒருமுறை இயக்கப் படும் என போக்குவரத்து துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT