Published : 10 May 2021 06:25 AM
Last Updated : 10 May 2021 06:25 AM
பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள குறிஞ்சி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மருதராஜா மனைவி ராஜலட்சுமி (39). பெரம்பலூர் நகராட்சியில் பணியாற்றி வரும் இவர், நேற்று பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே உள்ள மருந்தகத்திலிருந்து மொபெட்டில் சென்றுள்ளார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் ராஜலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனே, ராஜலட் சுமி சங்கிலியை பத்திரமாக பிடித்துக்கொண்டார். எனினும், 1 பவுன் மதிப்புள்ள ஒரு பகுதி சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தப்பிச்சென்றனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT