Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

கானூரில் தெருவில் கழிவுநீர் :

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கானூர் கிராமத்தில் தெருவில் வழிந்தோடும் சாக்கடை கழிவு நீர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு அருகே கானூரில் தெருவில் வழிந்தோடும் சாக்கடையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கானூர் கிராமத்தில் ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் ஸ்ரீமுஷ்ணம்-சேத்தியாத்தோப்பு சாலையோரம் செல்லும் செட்டியார் தெருவில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இந்த சாலையில் வசிக்கும் பொதுமக்கள் அதன் அருகில் உள்ள வேறு ஒரு சாலை வழியாக வீட்டு வந்து செல்கின்றனர். இந்த சாலையில் சாக்கடை கழிநீர் விடுவதை தடை செய்ய வேண்டும். சுகாதாரமான கிராமமாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கிராம மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x