Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கம்மாபுரம் பகுதியில் - சாமந்தி பூக்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் :

கம்மாபுரம் பகுதியில் மஞ்சள் சாமந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்.

கடலூர்

கம்மாபுரம் அருகே பல கிராமங்களில் மஞ்சள் சாமந்தி பூக்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கம்மாபுரம் அருகே உள்ள சிறுவரப்பூர், பெருவரப்பூர், ஓட்டிமேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மஞ்சள் சாமந்தி பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதன் மூலம் தினசரி வருமானம் கிடைத்து வருவதால் பலரும் பல்வேறு வகை பூக்களை பயிரிட ஆரம்பித்துள்ளனர். எல்லா காலங்களிலும் மஞ்சள் சாமந்தி பூக்கள் விற்பனை ஆவதால் அதற்கான தேவை அதிகரித்து வருகிறது.

வியாபாரிகள் நேரிடையாக வந்து அதிகளவில் இவ்வகை பூக்களை கொள்முதல் செய்கின்றனர். இதனால் இப்பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை விலை கிடைக்கிறது. இதனால் அலைச்சல் இல்லாமல் அபரிமிதமான வருமானம் தரும் மஞ்சள் சாமந்தி பூக்களை கம்மாபுரம் பகுதி விவசாயிகள் பயிரிட்டு அதிக வருமானம் பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்த மலர் விவசாயிகள் கூறுகையில்,"நல்ல விலைக்கு மஞ்சள் சாமந்தி பூக்களை உடனே பணம் கொடுத்து வியாபாரிகள் எடுத்து செல்கின்றனர். இதனால் தான் இப்பகுதி விவசாயிகள் பலர் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x