Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, வைகுண்டம், விளாத்தி குளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.
வைகுண்டம் தொகுதியில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும், திருச்செந்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாகவும் , தூத்துக்குடி தொகுதியில் பதிவான வாக்குகள் 29 சுற்றுகளாகவும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாகவும், கோவில்பட்டி தொகுதியில் பதிவான வாக்குகள் 27 சுற்றுகளாகவும், விளாத்திகுளம் தொகுதியில்பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்படு கின்றன.
வாக்கு எண்ணும் பணியில் 300-க் கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT