Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

சிவகங்கையில் 11 வாக்குச்சாவடி முகவர்களுக்கு கரோனா தொற்று :

சிவகங்கை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குச் செல்லும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்டிப்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்து கரோனா இல்லை எனச் சான்று பெற வேண்டும் அல்லது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவராக இருத்தல் வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் முகவர்களுக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு ஒரு வேட்பாளருக்கு 21 முகவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இதில் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானால், மாற்று முகவரை நியமிக்க வேண்டும் என்பதால் கூடுதலாக 10 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x