Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சேர்ந்த குலசேகர மோகன் என்பவர் கடந்த 20.4.2021 அன்று மாலை ஆசிரியர் காலனி பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மையத்தில் பணம் எடுக்க சென்றபோது, அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் ரூ.5 ஆயிரம் ஏற்கெனவே இருந்துள்ளது. அந்த பணத்தை எடுத்த குலசேகரமோகன் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில், பணத்தை முன்னதாக ஏடிஎம்இயந்திரத்தில் எடுத்தவர் விவரம் கிடைக்கவில்லை.
இதையடுத்து கடந்த 22.4.2021 அன்று தூத்துக்குடி ஏடிஎஸ்பி கோபியை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்தை தெரிவித்தார். சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் பணத்தை எடுக்காமல் சென்றவர் தூத்துக்குடி அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த இயுசேபீயுஸ் என்பதும், அவர்ஏடிஎம் இயந்திரத்தில் பணப்பரிவர்த்தனை செய்தபோது பணம் வரவில்லையென்று சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட காவல்துறை அலுவலகத்துக்கு இயுசேபீயுஸை வரவழைத்து, ரூ.5 ஆயிரம் பணத்தை குலசேகரமோகனே எஸ்பி ஜெயக்குமார் முன்னிலையில் நேரில் ஒப்படைத்தார். பணத்தை எடுத்து மனித நேயத்து டன் உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையை பாராட்டி குலசேகரமோகனுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி எஸ்பி பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT