Published : 29 Apr 2021 03:13 AM
Last Updated : 29 Apr 2021 03:13 AM

கட்டுப்பாடுடன் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்க கோரிக்கை :

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸிடம் உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், செங்கை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை அனைத்து உடற்பயிற்சி கூடங்களை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி உடற்பயிற்சி நிலையங்களை 6 மாதம் மூடியதால் வாடகை கட்டமுடியாமல், பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாமல் கஷ்டப்பட்டு, வாழ்வாதாரம் இழந்தோம். மீண்டும் இப்போது ஏப்ரல் 26-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை உடற்பயிற்சி கூடங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்

இது எங்கள் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும். எனவே சில கட்டுப்பாட்டுகள், தளர்வுகளுடன், உடற்பயிற்சி கூடங்களைத் திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x