Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM
மன்னார்குடியில் பேருந்துகளில் முகக்கவசம் அணிந்து பயணித்த 200-க்கும் மேற்பட்ட பயணிக ளுக்கு ஜேசிஐ அமைப்பு சார்பில் இலவசமாக பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
கரோனா 2-வது அலை வேக மாக பரவி வருவதால், பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதை ஊக்குவிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் நேற்று பேருந்துகளில் முகக்கவசம் அணிந்து பயணித்தவர்களுக்கு மன்னை ஜேசிஐ அமைப்பு சார்பில் பயணச் சீட்டு பெற்று இலவ சமாக வழங்கப்பட்டது. மேலும், முகக்கவசம் அணியாதவர் களுக்கு முகக்கவசம் வழங்கிய துடன், அதை அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி, மன்னார்குடியில் இருந்து திருமக்கோட்டை, விக்கிரபாண்டியம், ஒரத்தூர், எடமேலையூர், வடபாதி, வடுவூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளில் 200-க்கும் மேற் பட்டோருக்கு ஜேசிஐ அமைப் பினர் பயணச் சீட்டுகளை பெற்று இலவசமாக வழங்கினர்.
இதுகுறித்து மன்னை ஜேசிஐ அமைப்பின் தலைவர் எம்.சி. பிரகாஷ் கூறியதாவது:கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மக்களை உற்சாகப்படுத்தும். மேலும் அனைத்து அரசு அலுவ லகங்களிலும், வங்கிகளிலும் தானியங்கி சானிடைசர் கருவி நிறுவவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தன்னார்வலர் களுக்கு பரிசுகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இதில், அமைப்பின் முன்னாள் மண்டலத் தலைவர் வி.எஸ்.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT