Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM
தி.மலை மாவட்டத்தில் மே 2-ம் தேதி வாக்கு எண்ணும் மையங் களுக்கு வரும் நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி நேற்று தொடங்கியது.
தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி மற்றும் தி.மலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மே வரும் 2-ம் தேதி எண்ணப்படவுள்ளன.
இதையொட்டி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், காவல் துறையினர், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள், ஊடகத் துறையினர் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், வந்தவாசி, செய்யாறு, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம் மற்றும் போளூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
மேலும், அவர் தச்சூர் கிராமத்தில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள வாக்கு எண்ணும் மையம் மற்றும் ஆரணி அடுத்த எஸ்வி நகரில் அமைக்கப்பட்டுள்ள 70 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT