Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM
கரோனா முதல் அலையின்போது மருத்துவத்துறையினருக்கு அரசு அறிவித்த சலுகைகள், உறுதி மொழிகளை உடனே நிறைவேற்றி, அவர்களின் ஏமாற்றத்தைப் போக்க வேண்டும் என கொமதேக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு முழுவதும் முதல் கரோனா அலை கடந்த வருடம் பரவியபோது, மருத்துவர்களும், செவிலியர்களும் உயிர் காக்கும்கடவுள்களாக போற்றப்பட்டனர். மாநில அரசுகளும் மருத்துவர் களுக்கும், செவிலியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அறிவித் தார்கள். சிறப்பு ஊதியமும், காப்பீட்டு திட்டங்களும் அறிவிக்கப் பட்டன.
ஆனால், கரோனா முதல் பரவல்குறைய ஆரம்பித்த உடன் மருத்துவத்துறைக்கான வாக்குறுதிகள் எல்லாம் காற்றில்பறக்க விடப்பட்டன. மருத்துவர் களுக்கும், செவிலியர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட எதையும் அரசாங்கங்கள் வழங்கவில்லை. அதனால் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தார்கள்.
இரண்டாவது கரோனா பரவல் இவ்வளவு தீவிரமாக இருக்குமென்று அறியாத மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாது தடுமாறி கொண்டிருக்கின்ற நேரத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள் ஒத்துழைப்பும் முன்புபோல இல்லை என்ற செய்தியும் வேதனையளிக்கிறது.
பல மருத்துவமனைகளில் குறைவான மருத்துவர்களையும், செவிலியர்களையும் வைத்துதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவையான ஆக்சிஜன் திட்டமிடலும், ஒத்துழைப்பின்மை காரணமாகவும் சரிவர நடக்கவில்லை. தேவை யான உயிர்காக்கும் மருந்துகளும் திட்டமிட்டு இருப்பு வைக்கப் படவில்லை. இதற்கெல்லாம் ஈடுபாடும்,ஆர்வக்குறைவும் தான் காரணம்.
இந்நிலையில், மருத்துவர் களையும், செவிலியர்களையும் முழுவீச்சில் களமிறக்காமல் கரோனா பரவலில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. உடனடியாக மருத்துவமனைகளில் பணி யாற்றுபவர்களுக்கு உறுதிமொழி அளித்ததை அரசுகள் நிறைவேற்ற வேண்டும். 24 மணி நேரமும் பணியாற்றுகின்ற மருத்துவமனை ஊழியர்களுக்கு குறை வைக்காமல் தேவையானவற்றை செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT