Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM
இந்திய தொழிலாளர் கட்சியினர், கட்சித் தலைவர் பி.ஆர்.ஈஸ்வரன் தலைமையில், பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வாயில் கருப்புத் துணி கட்டி வந்து மனு அளித்தனர்.
மனுவில் தெரிவித்துள்ளது: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை வட்டம் மலையாளப்பட்டி ஊராட்சியில் துப்புரவு தொழி லாளராக பணியாற்றி வந்த பெரியசாமி 9.1.2021 அன்று உயிரிழந்தார். அவரது மனைவி மல்லிகா மற்றும் மகள்கள் வாரிசு சான்றிதழ், ஈமச்சடங்கு நிதி, பணிப்பதிவேடு ஆகியவற்றை கேட்டு மலையாளப்பட்டி ஊராட்சி அலுவலகம், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம், வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பித்துள்ளனர். பலமுறை நேரில் சென்றும் இதுவரை அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாரிசு சான்றிதழ், பணிப்பதிவேடு, ஈமச்சடங்கு நிதி உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.
கரோனா பேரிடரில் முன்கள பணியாளராக பணியாற்றி உயிரிழந்த தொழிலாளரின் குடும் பத்தினருக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் உடனடியாக கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன் களப்பணியாளரின் குடும்பத்தினரை அலைக்கழித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
சத்திரமனை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அளித்த மனுவில், “எங்கள் ஊரின் முக்கியத் தொழில் விவசாயம். ஊரில் உள்ள சத்திரமனை ஏரி நீரைக் கொண்டு இப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் - துறையூர் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக எங்கள் ஊர் ஏரி யிலிருந்து மண்ணை வெட்டி பயன் படுத்திக்கொள்ள ஒப்பந்தாரருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஏரியின் நீர் சேமிப்பு நிலைமை, ஏரியைச் சுற்றியுள்ள பசுமை பரப்பு, பல்லுயிர் சூழல், விவசாய சாகுபடி ஆகியவை பாதிக்கப்படும். எனவே, இப்பகுதி பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏரியில் மண்ணை வெட்டி எடுக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT