Published : 25 Apr 2021 06:09 AM
Last Updated : 25 Apr 2021 06:09 AM
முழு ஊரடங்கு நாளான இன்றும் (25-ம் தேதி), மே 2-ம் தேதியும் கரூர்-திருச்சி சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு ஞாயிறு கிழமையான இன்று முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளான இன்றும், மே 2-ம் தேதியும் திருச்சி-கரூர் சிறப்பு ரயில் (06123) மறுமார்க்கத்தில் கரூர்-திருச்சி சிறப்பு ரயில் (06124) ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT