Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM
சேத்துப்பட்டில் கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்' வைக்கப்படும் என வட்டாட்சியர் பூங்காவணம் எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள வர்த்தக பகுதிகளில் மக்கள் அதிகளவில் கூடி வந்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் பூங்காவணம் தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
போளூர் சாலை, ஆரணி சாலை, வந்தவாசி சாலை மற்றும் செஞ்சி சாலையில் உள்ள வணிக வளாகங்கள், இனிப்பகங்கள், உணவகங்கள், பூக்கடைகள், துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
மேலும், சமூக இடை வெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர் களை அனுமதித்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், “கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடை வெளியை பின்பற்றி வாடிக்கை யாளர்களை அனுமதிக்க வேண்டும், கடையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். முகக்கவசம் அணிந்து வராத நபர்களுக்கு பொருட்களை வழங்கக் கூடாது.
அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றாதவர்களின் கடைகள் பூட்டி ‘சீல்' வைக்கப்படும்” என வட்டாட்சியர் எச்சரித்தார்.
இதைத்தொடர்ந்து, பேருந்து களில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் பணியில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் முகக் கவசம் அணிந்து உள்ளனரா? எனவும் ஆய்வு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT