Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM

நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் - கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று மாலை திருப்பலி : பெருந்துறை ஞாயிறு சந்தை இன்றே நடக்கிறது

ஈரோடு

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், ஈரோடு தேவாலயங்களில் இன்று திருப்பலி, வழிபாடுகள் நடக்கிறது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வாரந்தோறும் ஞாயிறுமுழு ஊரடங்கினை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால்,ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படவுள்ளன. இதனையடுத்து வழக்கமாக ஞாயிறு தோறும், கிறிஸ்தவ தேவாலயங்களில் நடக்கும் வழிபாடு, அரசின் வழிகாட்டு நெறிமுறைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஆலய பங்கு தந்தையும், ஈரோடு மறைமாவட்ட முதன்மை குருவான ஜான் சேவியர் வெளியிட்ட அறிக்கை:

அரசின் உத்தரவினை ஏற்று, கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாளை (ஞாயிறு) திருப்பலி உள்ளிட்ட வழிபாடுகள் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக, சனிக்கிழமை (24-ம் தேதி) மாலை 5 மற்றும் மாலை 6.15 மணிக்கு திருப்பலிகள் நடக்கும். இந்த இரண்டு வேளைகளில் ஏதேனும் ஒரு நேரத்தில், கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி வழிபாடுகளில் பங்கேற்கலாம், எனத் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது, கோயில்களில் பக்தர்கள் பங்கேற்பில்லாமல், வழக்கமான பூஜைகள் நடைபெறவுள்ளன.

வாரச்சந்தை மாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறுஇடங்களில் ஞாயிறு தோறும்வாரச்சந்தை நடந்து வருகிறது. ஞாயிறு ஊரடங்கு காரணமாக சந்தை சனிக்கிழமை நடக்கும்வகையில் மாற்றியமைக்கப் பட்டுள்ளது. பெருந்துறையில் வாரந்தோறும் ஞாயிறு நடக்கும் வாரச்சந்தை, இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கும் என கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி நிர்வாகம் அறிவித் துள்ளது.

வழக்கமாக சந்தையில் அமைக்கப்பட்ட 189 கடைகளை தவிர, வேறு கடைகளுக்கு அனுமதியில்லை. சாலையோரங் களில் கடை அமைக்கக் கூடாது. வியாபாரிகள், பொதுமக்கள் கரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், என வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.

100 வழக்குகள் பதிவு

இதனிடையே இரவுநேர ஊரடங்கை மீறுபவர்கள் மீதான நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மாவட்டம்முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஊரடங்கை மீறியதாக 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x