Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM
தாமிரபரணி பாசனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 8,124 ஏக்கர் நிலங்களுக்கு முன்கார் சாகுபடிக்கு, தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிபாசனத்தில் மருதூர் அணைக்கட்டின்கீழ் உள்ள மேலக்கால் மற்றும் கீழக்கால்மூலம் 20,547 ஏக்கரும், வைகுண்டம் அணைக்கட்டு வடகால் மற்றும் தென்கால் மூலம் 25,560 ஏக்கரும் என மொத்தம்46,107 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை கார் பருவம் என்றும், அக்டோபர் 15 முதல் மார்ச்முடிய பிசான பருவம் என்றும் இருபோக விவசாயம் நடைபெறுகிறது.
முன் கார் சாகுபடி
இதுதவிர, ஏப்ரல், மே மாதங்களில் முன்கார் சாகுபடி என்ற பருவ முறையும்பழக்கத்தில் உள்ளது. வைகுண்டம்அணைக்கட்டு வடகால் மற்றும் தென்கால்பாசனத்தில் உள்ள 8,124 'ஏ' குரூப் நன்செய்நிலங்கள் முன்கார் சாகுபடி உரிமை பெற்றவை. இந்த நிலங்களுக்கு அணைகளில் உள்ள நீர் இருப்பை பொறுத்துமுன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். பெரும்பாலான ஆண்டுகளில் இந்தகாலக்கட்டத்தில் அணைகளில் நீர் இருப்புமிகவும் குறைவாகவே இருக்கும் என்பதால் முன்கார் சாகுபடிக்கு அனுமதி கிடைப்பதில்லை.
போதுமான நீர் இருப்பு
`அணைகளில் நடப்பாண்டு போதுமான தண்ணீர் உள்ளதால் முன்கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என, வைகுண்டம் அணைக்கட்டு வடகால் மற்றும் தென்கால் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், முன்கார் சாகுபடிக்கு தண்ணீர்திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.ஆளுநரின் ஒப்புதலுடன், பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன் நேற்று வெளியிட்டஅரசாணை விபரம்: வைகுண்டம்அணைக்கட்டின் கீழுள்ள தெற்கு மற்றும்வடக்கு பிரதான கால்வாய்களின் மூலம்பயன்பெறும் 8,124 ஏக்கருக்கு, பாபநாசம்,சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து 23.04.2021 முதல் 122 நாட்களுக்கு முன்கார் சாகுபடிக்கு 1,354 மில்லியன் கனஅடி மற்றும் குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டுக்கு 3,689.28 மில்லியன் கனஅடி என மொத்தம் 5,043.28 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், நீர்வரத்து மற்றும்நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து அரசுஆணையிடுகிறது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகுமுன்கார் சாகுபடிக்கு அனுமதி கிடைத்திருப்பது வைகுண்டம் பகுதி விவசாயிகளை மகிழ்ச்சி யடையச் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT