Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM

தனியார் நிறுவனங்கள் லாப நோக்கில் இயங்குவதால் - பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் வலியுறுத்தல்

திருப்பூர்

தனியார் நிறுவனங்கள் லாப நோக்கில்இயங்குவதால், பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசுஅனுமதி அளித்து ஊக்கப்படுத்த வேண்டுமென, திருப்பூர் மக்களவைத் தொகுதிஉறுப்பினர் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16.39 லட்சம் பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை யில், கிட்டத்தட்ட 3 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது, நோய் தொற்றின் வேகத்தை காட்டுகிறது.2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் நோய் தொற்றின் தன்மை கண்டறியப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டுமென, உலக சுகாதார நிறுவனம் கடுமையாக எச்சரித்தது. முகக் கவசம், நோய்த் தடுப்பு கருவிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் உளிட்டவை போதிய இருப்பு வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. ஆனால், தற்போதைய தட்டுப்பாட்டுக்கு மோடி அமைச்சரவையின் பொறுப்பற்ற போக்குதான் காரணம்.

நாசிக்கில் 24 பேர் ஆக்சிஜன் சிலிண்டர்கசிந்து மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், ஆக்சிஜன் இருப்பு வைத்திருக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது. இங்கிருந்து 45 லட்சம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு செல்லும்போது, குறைந்தபட்சம் தமிழகஅரசை கேட்டிருக்க வேண்டும். ஆனால்,அதனை மத்திய அரசு செய்யவில்லை.நாடு முழுவதும் இன்றைக்கு ஆக்சிஜன்பற்றாக்குறை உள்ளது. கேரளாவில் 50 லட்சம் தடுப்பூசிகள் கேட்டால், வெறும் ஐந்தரை லட்சம் தடுப்பூசியை அனுப்புகிறார்கள்.

இது, பாஜக ஆளாத மாநிலங்கள் மீது மத்திய அரசு கடைபிடிக்கும் பழிவாங்கும்போக்கு. கட்சி பேதமின்றி அனைத்துமாநிலங்களுக்கும் தடுப்பூசி, ஆக்சிஜன் போன்ற மருத்துவத் தேவையை மத்தியஅரசு நிறைவேற்ற வேண்டும். 13.1கோடி எண்ணிக்கையில், தடுப்பூசியை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால்,இங்குள்ளவர்களுக்கு போடுவதற்கு தடுப்பூசி இல்லை. உள்நாட்டுத் தேவைபோக,ஏற்றுமதியில் ஈடுபட வேண்டும். தனியார்நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் லாபநோக்கில்தான் இயங்குகின்றன. எனவே,பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரித்து, தட்டுப்பாட்டை போக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து, ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x