Published : 20 Apr 2021 03:16 AM
Last Updated : 20 Apr 2021 03:16 AM
சுகாதாரத் துறை, உதவும் கரங்கள் அமைப்பு மற்றும் கோஜீ-ரியூ கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பாப்பாந்தாங்கல் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.
கராத்தே பயிற்றுநர் சந்திர சேகரன் தலைமை வகித்தார். ஆற்காடு - திண்டிவனம் சாலை யில் உள்ள பாப்பாந்தாங்கல் கிராமத்தில் முகக்கவசம் அணியா மல் சென்றவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கி, அதன் முக்கி யத்துவதை எடுத்துரைத்தனர்.
தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு
பின்னர், பாப்பாந்தாங்கல் அகதிகள் சிறப்பு முகாம் குடியிருப்பு பகுதியில் பேரணியாக சென்று கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், அவர்கள் வீடு, வீடாக சென்று கிராம மக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT