Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆளுநர், தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை :

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர் ராஜவேலு. படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி/கடலூர்

டாக்டர் அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே உள்ள அவரது சிலைக்குஅரசின் சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கரின் உரு வப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்பி உள்ளிட்டோர் சட்டப்பேரவை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி உள் ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கடற்கரைச் சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத் துக்கும் சென்று, அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இரு கட்சி அலுவலகங்களிலும் அம்பேத்கரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக சார்பில் தெற்கு மாநில அமைப் பாளர் சிவா எம்எல்ஏ தலைமையில் ஊர்வலமாக சென்ற அக்கட்சியினர், புதுச்சேரி சட்டப் பேரவை அலுவலகம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர். துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநிலசெயலர் அன்பழகன் எம்எல்ஏ தலைமை யில், உப்பளம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், புதுச்சேரி சட்டப் பேரவை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் மேற்கு மாநில செயலர் ஓம்சக்தி சேகர் தலைமையில், அதிமுக மாநில கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளைக் கொண் டாடினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுச் செயலர் ரவிக்குமார் எம்.பி தலை மையில், மாநில முதன்மை செயலர் தேவ.பொழிலன் உள்ளிட்டோர் புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் புதுச்சேரி முழுவதும் அம்பேத்கர் சிலைக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

கடலூர், விழுப்புரத்தில் கொண்டாட்டம்

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண் டாடப்பட்டது.

கடலூரில் அதிமுக சார்பில் அமைச்சர் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், சேவல்குமார் உள்ளிட்ட நிர் வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இது போல திமுக சார்பில் நகர செயலாளர் ராஜா தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னாள் எம்எல்ஏக்கள் இளபுகழேந்தி, ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார் பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலை மையில் மாலை அணிவிக்கப்பட்டு மரி யாதை செலுத்தப்பட்டது.

சிதம்பரத்தில் அதிமுக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் ஆகியோர் அம் பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெய்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு பாமக வேட்பாளர் ஜெகன் மாலை அணிவித்தும், அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். என்எல்சி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பாலாஜி, பொதுச்செயலாளர் செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபாராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். புவனகிரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சரவணன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, முத்தமிழ்ச் செல்வன், விழுப்புரம் நகர செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன், எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் பசுபதி, ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், பக்தவச்சலம், மாவட்ட அம்மா பேரவை தலைவர் ராமதாஸ், அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் திருப்பதி பாலாஜி உள்ளிட்ட அதிமுகவினர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் டாக்டர் லட்சுமணன், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x