Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM
திருவாரூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை அமைச்சர் ஆர்.காமராஜ் உள்ளிட்ட அதிமுக வேட்பாளர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன. இதற்காக வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் திருவாரூர் திருவிக கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவிக கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை நேற்று நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிமுக வேட்பாளர்களான திருவாரூர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், மன்னார்குடி சிவா.ராஜமாணிக்கம், திருத் துறைப்பூண்டி சுரேஷ்குமார் ஆகியோரும் உடன் சென்றனர்.
பின்னர், திருவாரூரில் மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார். அப்போது, மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT