Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM
வைகுண்டத்தில் முயல் வேட்டையாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ரூ.1.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வைகுண்டம் வனச்சரகத்து க்கு உட்பட்ட அடைக்கலாபுரம் மேய்ச்சல் பரப்பில், வனச்சரக அலுவலர் விமல்குமார் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அடைக்கலாபுரத்தை சேர்ந்த 7 பேர் காட்டு முயல்களை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் 7 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.1.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இனிமேல் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற அறிவுரை வழங்கி, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT