Published : 13 Apr 2021 03:13 AM
Last Updated : 13 Apr 2021 03:13 AM

பிள்ளையார்பட்டி கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு :

திருப்பத்தூர்: கரோனா பரவல் காரணமாக சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கோயிலில் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரோனா பரவலால் தடை செய்த பகுதிகளைச் சேர்ந்தோர், முகக்கவசம் அணியாதோர் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. மேலும் 65 வயதுக்கு மேற்பட்டோர், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சுவாச நோய், இதய நோய் போன்ற நோய்கள் உள்ளோர், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்டோர் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

கோயில் வளாகத்தில் எச்சில் துப்புதல், அசுத்தப்படுத்தக் கூடாது, பக்தர்கள் கால்களை நீராலும், கைகளை கிருமி நாசினியாலும் சுத்தப்படுத்தியும், தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையை அறிந்தபிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கோயில் வளாகத்துக்கு உள்ளே, வெளியே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். சுவாமி சிலைகளை தொடுவதையும், தேங்காய், பூ, பழம் கொண்டு வருவதையும் தவிர்க்க வேண்டும். கோயில் திருவிழா, வீதி உலா போன்றவற்றில் அரசு உத்தரவுப்படியும், கோயில் ஆகம விதிகளின் படியும் பூஜை கைங்கரியங்கள் நடக்கும். பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பூஜைகள் முடிந்த பிறகு சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு பக்தர்கள் தங்கி இளைப்பாற அனுமதி இல்லை. ஐந்து பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x