Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM
தேர்தல் தகராறில் அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடியில் இருபிரிவினரிடையே கடந்த 7-ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டது. அதில், இருவர் கொல்லப்பட்டனர். இக்கொலையை கண்டித்து, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, விடுதலை சிறுத்தைகள் சேலம் மண்டல செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். தொண்டரணி மாநிலச் செயலாளர் இமயவரம்பன், மாவட்ட செயலாளர்கள் வசந்த், அய்யாவு, மாநகர பொருளாளர் காஜா மொய்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இரட்டை கொலையில் தொடர்புடையவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாடத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் சக்தி, செய்தி தொடர்பாளர் பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT