Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

சிவகங்கை மக்கள் நீதிமன்றத்தில் 105 வழக்குகளுக்கு தீர்வு :

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 105 வழக்குகளில் தீர்வு காணப்பட்டன.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைய வழிகாட் டுதல்படி சிவகங்கை மாவட்டத்தில் 10 மக்கள் நீதிமன்றங்கள் அமைக் கப்பட்டன. இதில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், சமரச குற்றவியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக் குகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வங்கிக் கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்பட்டன.

மாவட்ட அமர்வு நீதிபதி சுமதி சாய்பிரியா, மக்கள் நீதிமன்ற நிரந்தர நீதிபதி கருணாநிதி, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், குடும்ப நல நீதிபதி தமிழரசி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி உதயவேலன், சார்பு நீதிபதி மோகனா, மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நடுவர் பாரதி மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர்.

மொத்தம் 1,860 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. இதில் 97 வழக்குகள் தீர்க்கப் பட்டன. இதன் மூலம் ரூ.3.97 கோடி வரை வழக்காடியவர்களுக்குக் கிடைத்தன. மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வங்கி கடன் நிலுவை வழக்குகளில் 250 பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 8 வழக்குகள் தீர்க்கப்பட்டன. இதன் மூலம் வங்கிகளுக்கு ரூ.8.85 லட்சம் வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு நிர்வாக உதவியாளர்கள் மணிமேகலை, பானுமதி, விவேகானந்த், கோட்டீஸ்வரன் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x