Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் - 69.88 சதவீத வாக்குப்பதிவு : அதிகபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 76.55 சதவீதம்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 69.88 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 76.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 7,27,083 ஆண்கள், 7,60,560 பெண்கள், 139 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,87,782 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் 5,08,112 ஆண்கள், 5,31,575 பெண்கள், 41 மூன்றாம் பாலினத்தவர் என 10,39,728 பேர் வாக்களித்துள்ளனர். இது 69.88 சதவீதம்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் தொகுதியில் 1,05,903 ஆண்கள், 1,10,544 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,16,452 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 79,954 ஆண்கள், 85,728 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் என 1,65,685 பேர் வாக்களித்துள்ளனர். இது 76.55 சதவீதம்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதியில் 1,39,348 ஆண்கள், 1,45,892 பெண்கள், 54 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,85,294 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 93,526 ஆண்கள், 92,120 பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தவர் என 1,85,656 பேர் வாக்களித்துள்ளனர். இது 65.08 சதவீதம்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் தொகுதியில் 1,18,807 ஆண்கள், 1,26,196 பெண்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,45,020 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 82,553 ஆண்கள், 89,162 பெண்கள், 11 மூன்றாம் பாலினத்தவர் என 1,71,726 பேர் வாக்களித்துள்ளனர். இது 70.09 சதவீதம்.

வைகுண்டம்

வைகுண்டம் தொகுதியில் 1,10,433 ஆண்கள், 1,13,947 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,24,384 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 79,642 ஆண்கள், 82,675 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என 1,62,319 பேர் வாக்களித்துள்ளனர். இது 72.34 சதவீதம்.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1,22,647 ஆண்கள், 1,28,042 பெண்கள், 28 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,50,717 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 86,171 ஆண்கள், 88,861 பெண்கள், 9 மூன்றாம் பாலினத்தவர் என 1,75,041 பேர் வாக்களித்துள்ளனர். இது 69.82 சதவீதம்.

கோவில்பட்டி

கோவில்பட்டி தொகுதியில் 1,29,945 ஆண்கள், 1,35,939 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,65,915 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 86,266 ஆண்கள், 93,029 பெண்கள், 6 மூன்றாம் பாலினத்தவர் என 1,79,301 பேர் வாக்களித்துள்ளனர். இது 67.43 சதவீதம்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 76.55 சதவீதமும், குறைந்தபட்சமாக தூத்துக்குடி தொகுதியில் 65.08 சதவீதமும் வாக்குகள் பதிவாகி யுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x