Published : 29 Mar 2021 03:16 AM
Last Updated : 29 Mar 2021 03:16 AM

வல்லநாடு சரணாலயத்தில் 320 மான்கள் :

தூத்துக்குடி

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் வெளிமான், கடமான் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இந்த சரணாலயத்தில் 2 ஆண்டு களுக்கு ஒருமுறை வன உயிரின ங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி நடப்பாண்டுக்கான கணக்கெடுப்பு மாவட்ட வன அலுவலர் செண்பகப்பிரியா தலைமையில் 2 நாட்கள் நடைபெற்றது. வெளி மான்கள் 243, புள்ளிமான்கள் 47, கடமான்கள் 30 இருப்பது தெரிய வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x