Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM
சிவகங்கை, உருவாட்டியில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் நடந்தது.
சிவகங்கை விஸ்வநாத சுவாமி கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 18-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மார்ச் 19-ம் தேதி காலை 8 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து தினமும் இரவில் சுவாமி ரிஷப, மயில், யானை, குதிரை, உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார். மார்ச் 26-ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் தொடங்கி பிரதான வீதிகளில் சுற்றி வந்து நிலையை அடைந்தது. இன்று தீர்த்த வாரியும், இரவு 10 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கின்றன.
உருவாட்டியில் தேரோட்டம்
நேற்று காலை 5 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருள காலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் பறவைக் காவடி, மயில் காவடி, அக்கினிச்சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும், கரும்புத் தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT