Published : 28 Mar 2021 03:19 AM
Last Updated : 28 Mar 2021 03:19 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளைபெற்று வர 6 தொகுதிகளுக்கும் 39 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கரோனா பெருந்தொற்றுகாலத்தில் தேர்தல் நடைபெறுவதால் 80 வயதுக்கு மேற்பட்டோர்மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச் சாவடிகளுக்கு வரத் தேவையில்லை. அவர்கள் விருப்பத்தின் பேரில் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து தபால் வாக்குபோட விருப்பம் உள்ளதா, இல்லையா என்பதை அறிய அவர்களிடம் இருந்து 12டி படிவத்தை நிரப்பி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பெறப்பட்டன.
மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 3,503 பேர் தபால் வாக்கு போட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் தபால் வாக்குச்சீட்டுகளை நேரடியாக வீடுகளுக்கேகொண்டு வந்து கொடுத்து, அதில்அவர்கள் வாக்களித்ததும் திரும்பப்பெற்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி வரும் 29, 30, 31ஆகியமூன்று தினங்கள் நடைபெறு கிறது. தபால் வாக்குச் சீட்டுகளை கொண்டு செல்லும் குழுவுடன்வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் ஒருவரும் சென்று அனைத்து நடவடிக்கை களையும் குறிப்பிட்ட தொலை வில் இருந்து பார்க்கலாம். இந்த விவரமும் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குச் சீட்டுகளை கொடுத்து வாக்களித்த பிறகு பெற்று வருவதற்காக மாவட்டத்தில் 39 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் 29, 30, 31-ம் தேதிகளில் சம்பந்தப்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு தபால்வாக்குச் சீட்டுகளுடன் செல்வார்கள். அதில் அவர்கள் ரகசியமாகவாக்களித்து சீல் வைத்து வழங்கியதும் அதனை பெற்று வருவார்கள். குழுவினர் செல்லும் போது சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டில் இல்லையெனில் மீண்டும் ஒருமுறை செல்வார்கள். இந்த நடைமுறை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு 9 கம்பெனிகள் மத்திய பாதுகாப்பு படை வந்துள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி கண் காணித்து வருகிறார். கோவில்பட்டி தொகுதியில் மட்டும் கூடுதலாக 2 பறக்கும்படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் ஆட்சியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT