Published : 28 Mar 2021 03:19 AM
Last Updated : 28 Mar 2021 03:19 AM

பூக்களுக்கு நிலையான விலை கிடைக்கும் வகையில் - வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படும் : கலசப்பாக்கம் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் உறுதி

கலசப்பாக்கம் அடுத்த மசார் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதி புதுப்பாளை யம் அடுத்த சி.கெங்கம்பட்டு, ஜப்திகாரியந்தல், சேந்தமங்கலம், குலால்பாடி, நாச்சிபட்டு, மான் குட்டை, வடமாத்தூர், நத்த வாடி, பெரியகுளம், வாய்விடாந் தாங்கள், மேல்படூர், கீழ்படூர், மாஷாபூந்தமல்லி ஆகிய கிராம பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, “புதுப்பாளையம் ஒன்றியத்தில் மல்லி, முல்லை, காக்கட்டான், சம்பங்கி, கனகாம்பரம் உள்ளிட்ட பூ வகைகள் அதிகளவு பயிரிடப் படுகின்றன. பெங்களூருக்கு தினசரி சுமார் 25 ஆயிரம் கிலோ கொண்டு செல்லப்படுகிறது. பூக்களுக்கு நிலையான விலை கிடைக்கவில்லை.

அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்போது, வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படும். பூக்களுக்கு நிலையான விலையை நிர்ணயம் செய்து, வாசனை திரவியம் தயாரிக்க கொள்முதல் செய்யப்படும். அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ரூ.15 கோடியில் சிறு பாலங்கள் மற்றும் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை வசதி சரியாக இருக்கும்போதுதான் கிராம முன்னேற்றத்துக்கு முதல் படியாகும். கடந்த 5 ஆண்டுகளாக, அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. கலசப்பாக்கம் தொகுதி மேலும் வளர்ச்சி பெற எனக்கு மீண்டும் வாய்ப்பை தாருங்கள்” என கேட்டுக்கொண்டார். அப்போது, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி யினர் கலந்துகொண்டனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x