Published : 28 Mar 2021 03:19 AM
Last Updated : 28 Mar 2021 03:19 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 39 டாஸ்மாக் மதுபான கடைகள் வரும் ஏப்ரல் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூடிவைக்க வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி வரும்ஏப்ரல் 4-ம் தேதி காலை முதல் 6-ம் தேதி இரவு12 மணி வரை டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடி வைக்க வேண்டும். அதேபோல், வாக்கு எண்ணும் மே 2-ம் தேதியும் கடைகள்மூடிவைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 39 டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதை யொட்டி அமைந்துள்ள 2 மதுக்கூடங்கள், நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல்களில் மது விற்பனை செய்யக்கூடாது. உத்தரவை மீறி மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடையின் மேற்பார்வையாளர், விற்பனை யாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் படும்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT