Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

முந்திரி விவசாயிகள் நலனை பாதுகாப்பேன் : எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வாக்குறுதி

குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடலூர்

குறிஞ்சிப்பாடியில் திமுக வேட் பாளர் வாக்கு சேகரித்தார்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் பொன்னங்குப் பம், அகரம், அயன்அகரம், பெரி யகாட்டுசாகை, வழுதலம்பட்டு, வன்னியர்பாளையம், குள்ளஞ் சாவடி, அம்பலவாணன்பேட்டை, ஆயிக்குப்பம், சந்தைபேட்டை, வடபுதுக்குப்பம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது திமுக வேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்பேசுகையில், "தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதந்துள்ளேன். 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் எந்தவித மான திட்டப்பணிகளும் நடைபெற வில்லை. கடலூர் மாவட்ட அரசுமருத்துவக்கல்லூரி திமுக ஆட்சி யில் அடிக்கல் நாட்டப்பட்டு அதிமுகஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவு டன் அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்படும். வாழையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள் தயாரிக்கும் தொழிற் சாலை கொண்டு வரப்படும். முந்திரிவிவசாயிகளின் நலன் பாதுகாக் கப்படும். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் செயல்படுத் தப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x