Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.
அன்றுமுதல் தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதை தடுத்திடும் வகையிலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படைகள் என மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் 118 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.1.73 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், கடந்த 23-ம் தேதி வரை உரிய ஆவணம் காண்பித்த நபர்களிடம் ரூ.1.37 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT