Published : 24 Mar 2021 03:16 AM
Last Updated : 24 Mar 2021 03:16 AM
திருவண்ணாமலை மற்றும் ஆரணி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப் படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தேர்தல் பொது பார்வையாளர் பிரபாகர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும்போது, “தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. செய் யாறு, வந்தவாசி, ஆரணி மற்றும் போளூர் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள், ஆரணி அடுத்த தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படவுள்ளன. தி.மலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தி.மலை, செங்கம், கீழ்பென்னாத்தூர் மற்றும் கலசப் பாக்கம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்கு கள் எண்ணப்படவுள்ளன.
அடையாள அட்டை உள்ள, வாக்குச்சாவடி முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்குச்சாவடி எண்ணும் மையங் களில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.
வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்கு இயந்திரங் களை வைக்கும் அறை மற்றும் முன் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டிருக்கும்.
தபால் வாக்குகள் அச்சிடும் பணி நடைபெறுகிறது. தேர்தல் பணியில் 24 அலுவலர்கள் ஈடுபடு கின்றனர். மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என பல்வேறு நிலைகளில் உள்ள 35 ஆயிரம் பேருக்கு தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்படும். 75 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் உள்ள நிலையில், விருப்பம் தெரிவித் துள்ள 8,530 பேருக்கு தபால் வாக்கு படிவங்கள் வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி முகாம், இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. அப்போது அவர்களுக்கு தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்படும். மாவட்டத்தில் இதுவரை, ரூ.1.50 கோடி மற்றும் ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
இதையடுத்து, தி.மலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி மற்றும் தபால் வாக்குகள் அச்சிடும் பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் அருண் கிஷோத் டோங்க்ரே ஆகியோர் ஆய்வு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT