Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய 193 சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள் ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது, வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், சுயேச்சை வேட்பாளர்களுக்கு தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
இந்நிலையில், அங்கீகரிக்கப் பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கான சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதில், அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் (புற்கள்-பூக்கள்), பகுஜன் சமாஜ் கட்சி (யானை), பாஜக (தாமரை), இந்திய கம்யூனிஸ்ட் (கதிர் அரிவாள்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (அரிவாள்-சுத்தியல்), காங்கிரஸ் (கை), தேசியவாத காங்கிரஸ் (கடிகாரம்), தேசிய மக்கள் கட்சி (புத்தகம்) ஆகிய சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளான அதிமுக (இரட்டை இலை), திமுக (உதய சூரியன்), தேமுதிக (முரசு) ஆகிய சின்னங்கள் இடம் பெற்றுள்ளன.
சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஏசி இயந்திரம், கிரிக்கெட் பேட்ஸ்மேன், டார்ச் லைட், பிஸ்கட், செங்கல், கேக், கால்குலேட்டர், கேமரா, காலிபிளவர், சிசிடிவி கேமரா, காலணி, கரும்பு- விவசாயி, காஸ் சிலிண்டர், இஞ்சி, திராட்சை, பச்சை மிளகாய், ஹெல்மெட், அணிந்து கொள்ளும் பேண்ட், பென் டிரைவ், செல்போன் சார்ஜர் உள்ளிட்ட 193 சின்னங்கள் இடம் பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT