Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM

செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பேரவை தொகுதி - மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் :

பயிற்சி வகுப்பு நடத்திய ஆட்சியர், வகுப்பில் பங்கேற்ற மண்டல அலுவலர்கள்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6-ம்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடை செய்யும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் நிலையான கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

13 ஆயிரம் பணியாளர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக மண்டலத் தேர்தல் அலுவலர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம்13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜான் லூயிஸ் தலைமை தாங்கிப் பேசினார். வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறினார்.

அஞ்சல் வாக்கு படிவம்

இந்தப் பயிற்சி முகாமில் ஒவ்வொரு வாக்குசாவடி மையத்திலும் பயன்படுத்த வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் கையாள்வது, அஞ்சல் வாக்கு படிவம் பெறுவது, வாக்குச் சாவடிக்கு உரிய படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது, தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துவது போன்ற நியமனம் செய்யப்பட்ட மண்டல அலுவலர்களுக்கான கடமைகளையும், பொறுப்புகளையும் குறித்து மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் வகுப்புகள் நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மகளிர் திட்ட இயக்குநர் தர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி மற்றும்மண்டல அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x