Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM
சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளுக்கும் பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் தேர்தல் தொடர்பான குறைகள் இருப்பின் பொது பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கும், தேர்தல் ஆணையத்தால் 8 தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திற்கு வந்துள்ள பார்வையாளர்கள், முகாம் அலுவலகங்களில் தங்கி, தேர்தல் தொடர்பாக அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பார்வையாளர்கள், தங்களது முகாம் அலுவலகங்களில் தினமும் பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்திப்பர்.
கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி) தொகுதிகளின் பார்வையாளர் வந்தனா சிங், (செல்போன்- 63844 83907) ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில், சந்திக்கும் நேரம் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை.
ஏற்காடு (தனி) மற்றும் ஓமலூர் தொகுதிகளின் பார்வையாளர் பங்கஜ் யாதவ், (செல்போன்- 63844 83912) நெடுஞ்சாலைத் துறை ஏற்காடு பயணியர் மாளிகையில் பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் நேரம் காலை 10 மணி முதல் 11 மணி வரை.
மேட்டூர், எடப்பாடி தொகுதிகளின் பார்வையாளர் தினேஷ் பிரசாத், (செல்போன்-63844 83910) சேலம் இரும்பாலை விருந்தினர் (கிருஷ்ணா) மாளிகையில் பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் நேரம் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை.
சங்ககிரி தொகுதி பார்வையாளர் சின்மயி புன்லிக் ராவ் கோட்மரே (செல்போன்- 63844 83911), சேலம் கே.ஆர்.தோப்பூர் பவர் கிரிட் விருந்தினர் மாளிகையில் பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் நேரம் காலை 10 மணி முதல் 11 மணி வரை. சேலம் மேற்கு தொகுதி பார்வையாளர் டாக்டர் நிதின் மதன் குல்கர்னி (செல்போன்-63844 83913), சேலம் இரும்பாலை விருந்தினர் (வைகை) மாளிகையில் பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் நேரம் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை. சேலம் வடக்கு தொகுதி பார்வையாளர் லால்ரின் லியானா பனாய் (செல்போன்- 63844 83914), சேலம் அஸ்தம்பட்டி பொதுப்பணித்துறை கூடுதல் சுற்றுலா மாளிகை அறை எண்.2-ல் பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் நேரம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை.
சேலம் தெற்கு தொகுதி பார்வையாளர் டாக்டர் ருபேஷ் குமார் (செல்போன்- 63844 83909), சேலம் கே.ஆர்.தோப்பூர் பவர் கிரிட் விருந்தினர் மாளிகையில் பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் நேரம் காலை 9 மணி முதல் 10 மணி வரை.
வீரபாண்டி தொகுதி பார்வையாளர் ராம சந்துருடு (செல்போன்- 63844 83908), சேலம் கே.ஆர்.தோப்பூர் பவர் கிரிட் விருந்தினர் மாளிகையில், பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் நேரம் காலை 10 மணி முதல் 11 மணி வரை.
8 தேர்தல் பொதுப் பார்வையாளர்களும் சேலம் மாவட்டத்தில் உள்ள தங்களுக்கான சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வருகை தந்துள்ளனர். பொதுமக்கள் / வேட்பாளர்கள் / அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் அது குறித்து பொது பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT