Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM
தருமபுரி, கிருஷ்ணகிரியில் எல்ஐசி நிறுவன ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்ஐசி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது குறித்தும், காப்பீட்டு நிறுவனத்தில் அந்நிய நேரடி முதலீட்டு சதவீதத்தை உயர்த்துவது குறித்தும் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை கண்டித்து நேற்று எல்ஐசி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரியிலும் தருமபுரி கிளை சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் சந்திரமெளலி தலைமை வகித்தார். சேலம் கோட்ட இணைச் செயலாளர் மாதேஸ்வரன், முதல்நிலை அதிகாரிகள் சங்க கோட்டத் தலைவர் சுரேஷ், வளர்ச்சி அதிகாரிகள் சங்க கிளை பொறுப்பாளர் பிரபு, முகவர்கள் சங்க தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்ட முடிவில், கிளைச் செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார். மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு கிளைகள் முன்பும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிளை எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் மாது தலைமை வகித்தார். தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த தாமஸ் சுதந்திரதாஸ், வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT