Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், அமமுக, சமக,புதிய தமிழகம், நாம் தமிழர், மக்கள்நீதிமய்யம் கட்சி வேட்பாளர்கள் உட்பட 43 பேர் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். 6 தொகுதிகளிலும் இதுவரை 95 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் கே.சீனிவாசன் பயணியர் விடுதியில் இருந்து கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக கோட்டாட்சியர் அலுவலகம் வந்து,தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்புமனுவில் அவர், தனக்கு ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 766.73 மதிப்பிலும், மனைவிக்கு ரூ.12 லட்சத்து 16 ஆயிரத்து 740.13 மதிப்பிலும், தன்னை சார்ந்தவருக்கு ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 995.48 மதிப்பிலும் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.6 லட்சத்து 97 ஆயிரத்து 441 மற்றும் ரூ.7 லட்சம் அசையா சொத்துகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல் மக்கள் நீதி மய்யம்கட்சி சார்பில் போட்டியிடும் ஜி.கதிரவன்(42), அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் எம்.ஜி.ஆர்.நம்பி, அகில பாரத இந்து மகா சபாமாவட்டச் செயலாளர் கே.மாணிக்கராஜா (39), பகுஜன் திராவிடக் கட்சி சார்பில் பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம்(34), சுயேச்சையாக கோவில்பட்டியைச் சேர்ந்த ரவிசங்கர்(48), பொன்னுச்சாமி(53), காளிராஜ்(40), கயத்தாறு அருகே உசிலங்குளத்தைச் சேர்ந்த பவுன்துரை(27), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த குணசேகரன்(60) என 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.சுந்தர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிம்ரோன் ஜீத் சிங் கலோனிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் வரதராஜன், சமக மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எம்.ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.இந்து மக்கள் கட்சிசார்பில் மாநில துணைத் தலைவர் ராம குணசீலன், பகுஜன் திராவிட கட்சி சார்பில் மகாராஜன் உட்பட தூத்துக்குடி தொகுதியில் நேற்று 4 பேர் உட்பட இதுவரை மொத்தம் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வகுண்டம்
வைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ரமேஷும் வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் நேற்று 11 பேர் உட்பட இதுவரை 16 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குளோரியான், சமக வேட்பாளர் ஜெயந்தி உள்ளிட்ட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இத்தொகுதியில் இதுவரை மொத்தம்12 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் கே.சீனிச்செல்வி, தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல் காசிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக கே.ராமமூர்த்தி மனு தாக்கல் செய்தார். தென் மண்டல பொறுப்பாளர் எஸ்விஎஸ்பி.மாணிக்கராஜா, ஒன்றியச் செயலாளர் விஜயபாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் சி.முத்துகுமார், சுயேச்சை வேட்பாளர் பி.ராஜாமணி உட்பட மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் நேற்று 43 பேர் உட்பட இதுவரை மொத்தம் 95 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிவேட்பாளர் கிருஷ்ணசாமி உட்பட 7 பேர் மனு தாக்கல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT