Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை சேலம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கம் வரவேற்றுள்ளது.
இதுதொடர்பாக சங்க தலைவர் மாரியப்பன் கூறியதாவது:
சேலம் காமலாபுரம் விமானநிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்க விமான போக்குவரத்து அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கையை தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், விமான பயணிகள் சார்பில் வரவேற்கிகிறோம். கடந்த 1988-ம் ஆண்டு தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் சார்பில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு ரூ.90 லட்சம் நன்கொடை வழங்கினோம். இதன்மூலம் 137 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. கடந்த 33 ஆண்டாக விமான நிலையம் முழு பயன்பாட்டில் இல்லாத நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் செயல்பட தொடங்கியது.
தற்போது, கூடுதலாக விமானசேவை ஏற்படுத்திடவும், பராமரிக்கவும் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், பல்வேறு சேவைகள் மூலம் சேலம் மக்கள் பயன் அடைவார்கள். மத்திய அரசின்நடவடிக்கையை வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT