Published : 17 Mar 2021 03:16 AM
Last Updated : 17 Mar 2021 03:16 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 6 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். 6 தொகுதிகளிலும் இதுவரை 22 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. 6 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் வரை மொத்தம 16 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி சட்டபேரவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட பாஜக முன்னாள் நிர்வாகி ஏ.ராஜவேல் (66) என்பவர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் பாஜகவில் தூத்துக்குடி மேற்கு மண்டல தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார்.
இதுபோல் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை சேர்ந்த என்.பாலசுப்பிரமணியன் என்பவரும் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தூத்துக்குடி தொகுதியில் இதுவரை 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி புதுக்கோட்டை நடுத்தெருவை சேர்ந்த சந்தானம் மகன் உடையார்(27), கூலித்தொழிலாளி. நாம் இந்தியர்கட்சியின் தூத்துக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளரான இவர், நேற்று அக்கட்சி சார்பில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர நாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெ.கீதாஜீவன், அதிமுக கூட்டணிசார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் ஆகியோர் இன்று (மார்ச் 17) வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
வைகுண்டம் தொகுதியில் நேற்று ஒரு சுயேச்சை வேட்பாளர் உட்பட இதுவரை 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுபோல் விளாத்திகுளம் தொகுதியில் 2 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் நேற்று 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வரும் நாட்களில் மனு தாக்கல் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT