Published : 16 Mar 2021 03:14 AM
Last Updated : 16 Mar 2021 03:14 AM
கடலூர்/விழுப்புரம்/கள்ளக்குறிச்சி
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 74 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய கடந்த 12-ம் தேதி ஒருவர் கூட மனுத் தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் நேற்று அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் வேட்பு மனுத்தாக்கல் என பரபரப்பாகவே பிற்பகல் 3 மணி வரை காணப்பட்டது.
அந்தவகையில் செஞ்சியில் 9 வேட்பாளர்களும், மயிலம், வானூரில் தலா ஒரு வேட்பாளர், விக்கிரவாண்டி, விழுப்புரத்தில் தலா 8 வேட் பாளர்கள், திண்டி வனத்தில் 11 வேட்பாளர்கள், திருக்கோவிலூரில் 5 வேட்பாளர்கள் என நேற்று ஒரே நாளில் 43 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் 24 பேர் மனுத் தாக்கல்
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 தொகுதிகள் உள்ளன. இதில், கடலூரில் கடந்த 12-ம் தேதி அதிமுக சார்பில் அமைச்சர் சம்பத் மனுத் தாக்கல் செய்தார்.சிதம்பரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் பால முருகன் மனுத்தாக்கல் செய்தார். அன்று வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை.
மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் நேற்று காலை அதிமுக, திமுக, பாமக, நாம்தமிழர் கட்சி, அமமுக, சுயேட்சைகள் மனுத்தாக்கல் செய்தனர்.
கடலூர் தொகுதியில் ஒரு வேட்பாளரும், சிதம்பரத்தில் 3 வேட்பாளர்கள்,நெய்வேலி தொகுதியில் 5பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். காட்டுமன்னார் கோவில், குறிஞ் சிப்பாடி,பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி தொகுதியில் தலா 2 வேட்பாளர்களும், புவனகிரியில் தொகுதியில் 5 வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்தனர்.
மொத்தம் நேற்று 24 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 பேர் மனுத்தாக்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டத் திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி(தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 தொகுதிகளில் நேற்று வரை 9 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.நேற்று கள்ளக்குறிச்சி தனித் தொகுதியில் அதிமுக , நாம் தமிழர் கட்சி மற்றும் ஒரு சுயேட்சை என 3 பேரும், சங்கராபுரம் தொகுதியில் நாம் தமிழர், ஒரு சுயேட்சை என இருவரும், உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் அதிமுக மற்றும் ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர் என இருவர் உட்பட மொத்தம் 7 பேர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT