Published : 14 Mar 2021 03:15 AM
Last Updated : 14 Mar 2021 03:15 AM
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிமுக - திமுக நேரடியாக 6 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.
செங்கை மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.பி.கந்தனும், திமுக வேட்பாளராக அரவிந்த் ரமேஷும் போட்டியிடுகின்றனர்.
பல்லாவரம் தொகுதியில் திமுக சார்பில் இ.கருணாநிதி, அதிமுக சார்பில் சிட்லபாக்கம் ராஜேந்திரனும், தாம்பரம் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர். ராஜாவை எதிர்த்து அதிமுக சார்பில் டி.கேஎம்.சின்னையா களம்காண்கின்றார்.
செங்கை தொகுதியில் திமுக சார்பில் வரலட்சுமியை எதிர்த்து அதிமுகவை சேர்ந்த கஜேந்திரன் போட்டியிடுகிறார். திருப்போரூரில் பாமகவின் திருக்கச்சூர் ஆறுமுகத்தை எதிர்த்து விசிக வேட்பாளர் களம் காண்கிறார்.
செய்யூர் தொகுதியில்..
மதுராந்தகம் தொகுதியில் மதிமுகவின் மல்லை சத்யாவும் அதிமுகவின் மரகதமும் போட்டியிடுகின்றனர். செய்யூர் தொகுதியில் அதிமுகவின் கனிதா சம்பத்தும் விசிகவும் களம் காண்கிறது. செங்கை மாவட்டத்தில் அதிமுக - திமுக நேரடியாக 4 தொகுதிகளில் மோதுகின்றன.
காஞ்சி மாவட்டத்தில்..
காஞ்சி மாவட்டத்தில் காஞ்சி, உத்திரமேரூர், பெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய 4 சட்டப்பேரவைத்தொகுதிகளில் ஆலந்தூர், உத்திரமேரூர் தொகுதிகளில் அதிமுக - திமுக நேரடியாக மோதுகின்றன. ஆலந்தூர் தொகுதியில் அதிமுகவின் பா.வளர்மதியும் திமுகவின்தா.மோ.அன்பரசனும் போட்டியிடுகின்றனர். உத்திமேரூர் தொகுதியில் அதிமுகவின் சோமசுந்தரமும் திமுகவின் க.சுந்தரும் களம் காண்கின்றனர். காஞ்சி மாவட்டத்தில்2 தொகுதிகளில் அதிமுக - திமுகஇரண்டும் நேரடியாக மோதுகின்றன.
காங்கிரஸ், அதிமுக போட்டி
காஞ்சி தொகுதியில் பாமகவின் மகேஷ்குமாரை திமுகவின் சி.வி.எம்.பி.எழிலரசன் எதிர்த்து போட்டியிடுகிறார். பெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை எதிர்த்து அதிமுகவின் பழனி போட்டியிடுகிறார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT