Published : 14 Mar 2021 03:17 AM
Last Updated : 14 Mar 2021 03:17 AM

சேத்துப்பட்டில் மயான கொள்ளை திருவிழா :

சேத்துப்பட்டில் நடைபெற்ற மயான கொள்ளையில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள அங்காளம் மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடைபெற்றது.

சேத்துப்பட்டு நகரம் செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. பின்னர், மாசி மாத மயான கொள்ளை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மனின் வீதியுலா நடைபெற்றது.

செஞ்சி சாலை மற்றும் வந்தவாசி சாலை வழியாக வன்னியந்தல் ஏரியை சென்றடைந்தது. அப்போது, காளி வேடம் அணிந்தும், பழம் குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் வன்னியந்தல் ஏரியில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. அப்போது, விளை நிலத்தில் சாகுபடி செய்த தானியங்களை வீசி அம்மனை பக்தர்கள் வணங்கினர். இந்த விழாவில் சேத்துப்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x